சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் Movie BREAKING NEWS

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஜானிலால், செவிலோ ராஜா,
விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர்: பிரபாகர் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களில் பணி நடந்து வருகிறது.
எடிட்டர்: அந்தோணி,
கலை: NM மகேஷ்,
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் சாம்,
நடனம்: ராதிகா,
பாடல்கள் இசை: விஷால் பீட்டர்,
பின்னணி இசை: LV முத்து கணேஷ்.
ஒலி வடிவமைப்பு: ரமேஷ்,
சவுண்ட் FX: ரேண்டி,
எழுத்து & இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது
அடுத்த கட்டுரையூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!