இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைNC22 படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்
அடுத்த கட்டுரைசோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது