நவம்பர்-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி’

காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’.

சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.

சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.

சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல்,
நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாக்டர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைதன் புதிய நாவலை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய கபிலன்வைரமுத்து