தன் புதிய நாவலை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய கபிலன்வைரமுத்து

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து தான் எழுதியிருக்கும் புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை தன் முக நூலில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவு இது:

நிழலுடைமை

நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம். நிழல்வெளியாக இருக்கும் இணையவெளி நவீன நிலவுடைமைச் சமூகமாக தன்னைக் கட்டமைத்துவருகிறது. Digital Feudalism என்று ஆங்கில அறிஞர்கள் அழைக்கும் நிழலுடைமை ஆதிக்கத்திற்குநம் தரவுகளின் பரிமாற்றமே எரிபொருளாக இருக்கிறது. வெளிவரவிருக்கும் என் நாவல்நிழலுடைமைத்துவம் குறித்த ஒரு மாய வேடிக்கை.

ஒரு புத்தகத்தை அதன் தலைப்பில் இருந்தும் அட்டைப் படத்தில் இருந்தும் அறிமுகம் செய்வதுவழக்கம். என் புத்தகத்தின் பின் அட்டையாக அமைந்திருக்கும் இந்த ஓவியத்தில் இருந்து என்அறிமுகத்தைத் தொடங்குகிறேன். நண்பர் ஹாசிப்கான் வரைந்திருக்கும் இப்படம் கதையில் வரும்ஒரு வரலாற்று நிகழ்வைக் குறித்தாலும் எக்காலத்திற்குமான குறியீடாக இது அமைந்திருக்கிறது.

நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று நீண்ட நாட்கள் யோசித்து ஒரு பெயர் கிடைத்தது. பலநூற்றாண்டு கால தூசு தட்டி அதை அச்சில் ஏற்றியிருக்கிறோம்.

வருகிற திங்கள் காலை 10:30 மணிக்கு நூலின் தலைப்பும் – முகப்பும் – வெளியீட்டு தேதியும்…

அன்புடன்
கபிலன்வைரமுத்து

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநவம்பர்-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி’
அடுத்த கட்டுரை‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி