விஜயானந்த்தின் கதை
இது கதையல்ல கர்நாடகாவில் உண்மையாகவே உழைத்து வாழ்வில் முன்னேறிய விஜய் சங்கேஷ்வர் என்பவரின் வாழ்க்கை வரலாறு.
1950: கதையின் நாயகன் விஜய், தனது அப்பாவின் தொழிலான பிரின்டிங் வேலையை மிக சிறப்பாக செய்து வருகிறார், அவரின் அப்பா இந்த தொழிலை விஜய்யிடம் ஒப்படைக்க வரும் போது, விஜய் தனக்கு லாரி தொழில் தொடங்க ஆசை படுவதாக சொல்கிறார். ஆனால் விஜய்யின் அப்பா அதற்கு எதிர்ப்பான கருத்தை தெரிவித்து விடுகிறார், மற்றும் விஜய்க்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்றும் கூறுகிறார்.
விஜய் பல இடங்களில் போராடி கடனை பெற்று லாரி ஒன்றை வாங்குகிறார். ஆனால் லாரிக்கான எந்த ஏற்றுமதி வேலையும் கிடைக்கவில்லை. பிறகு நண்பன் மூலமாக ஒரு வேலையும் கிடைக்கிறது. அப்படியே அதை பிடித்துக்கொண்டு அடுத்தடுத்து தனது கடின உழைப்பினால் 4 லாரிகளை வாங்குகிறார் VRL என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். இதற்கடுத்து இவர் எப்படி அடுத்தடுத்த படிக்கு எப்படி சென்றார் என்பதும் அதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதே படத்தின் மீதி கதை… ( தற்போது இவர் 4300) வாகனங்களுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது )
இதனை இயக்குனர் ரிஷிகா ஷர்மா ஒருவரின் வாழக்கையை அப்படியே தத்ரூபமாக எடுத்துள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னனி இசை
படத்தில் கடுப்பானவை
பாடல்
Rating: ( 3.5/5 )