நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழு !!

Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders Team Jammy குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் வாழும், 10 ஏழைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில் (டிசம்பர் 11) சைக்கிள் வழங்கியுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 10 அன்று ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. முதல் முறையாக கிராமத்து லுக்கில் ஆர்யா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

பின்பு ஆர்யா பிறந்த நாளில் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் அரசுப்பள்ளியில் படிக்கும் அந்த பகுதிகளில் வாழும் ஏழை மாணவ, மாணவிகள் 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆர்யா அவர்களால் சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும் படக்குழுவினர், கிராமத்து மக்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் இணைந்து, ஆர்யா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய ஆர்யாவையும், படக்குழுவினரையும் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக நடந்து வருகிறது. இதுவரையிலும் மாடர்ன் இளைஞராக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ஆர்யா, முதல் முறையாக இப்படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக நடிக்கிறார்.

ஆர்யா பிறந்த நாளில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா போஸ்டர் பின்னணியில் இருக்க, கருப்பு வேட்டி சட்டையில், தாடியுடன் கரடுமுரடான கிராமத்து லுக்கில் அசத்துகிறார் ஆர்யா. இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘Rugged Boy காதல் ‘ கிராமத்து இசை ஆல்பம்!
அடுத்த கட்டுரை“பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது