சமந்தாவின் சமீபத்திய ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘யசோதா’ ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது

சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது.

ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், ‘யசோதா’ திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஸ்ரீதேவி மூவிஸின் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் படத்தைத் தயாரித்து இருக்க, ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ‘மெலோடி பிரம்மா’ மணி ஷர்மா படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

உன்னி முகுந்தன் மற்றும் வரலக்‌ஷ்மி இருவரும் சமந்தாவுடன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்பிரிடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது
அடுத்த கட்டுரைபொதுவாகவே திருட்டு வீடியோவை பிடிக்காது இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது இறங்கி அடிப்பேன் – நடிகர் விஷால்