கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம்.

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் காலேஜ் ரோடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய லிங்கேஷ்.

நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம். மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக்கல்வியை கொடுத்துவருகிறது.

ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது.

கல்வி கற்க கல்விக்கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.

சில உயர் படிப்புகளை திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்கமுடியாமல் போனவர்கள் பலர்.

அதிலும் கல்விக்கடன் வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலமை பெரும் துயரமானது.

கல்விகடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.

கல்விக்கடன் குறித்து இந்த படம் விரிவாக பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். சஸ்பன்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும்.

கமர்சியல் கலந்த சமூகபொருப்புள்ள கதையை சொல்லவருகிறோம் என்றார்.

நிகழ்வில் இயக்குனர் ஜெய்அமர்சிங், மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபொதுவாகவே திருட்டு வீடியோவை பிடிக்காது இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது இறங்கி அடிப்பேன் – நடிகர் விஷால்
அடுத்த கட்டுரைதயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இல்ல திருமணம் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது