கனெக்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

கனெக்ட் கதை

கதையின் நாயகன் ஜோசப் ( வினய் ) கதையின் நாயகி சூசன் ( நயன்தாரா ) மற்றும் அவர்களின் குழந்தையான ஆனா உடன் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர் . அந்த சமயத்தில் கோவிட் காரணமாக ஊரடங்கு போடப்படுகிறது . ஜோசப் ஒரு டாக்டர் என்பதால் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார் , எதிர்ப்பாராத விதமாக ஜோசப் நோய் தொற்றினால் இறந்துவிடுகிறார்.

தனது அப்பாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆனா ஆன்லைனில் செய்வினை பற்றிய வீடியோக்களை பார்க்கிறாள், பிறகு ஒரு பெரிய பெண்னின் உதவியுடன் ஓஜா போர்ட் விளையாட்டை விளையாடுகிறாள் ஆனா. அப்போது அந்த பெண் வேறு ஒரு ஆவியை ஆனாவின் மீதி ஏவி விடுகிறார். இப்படி ஆபத்தில் சிக்கிய ஆனாவை, அம்மா சூசனும், தாத்தா சாமுவேலும் சேர்ந்து எப்படி மீட்டனர் என்பதும் , அந்த கெட்ட ஆவியினால் ஆனாவிற்கு என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் அஷ்வின் சரவணன் அவருக்கே உண்டான திகில் பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
சிறப்பு சப்தங்கள் (SFX)

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *