ராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்

ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது.
அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவிடுதலை தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைவிடுதலை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்