‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பில் இணைந்த ‘யோகிபாபு’..!

விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரித்து வரும் படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வெற்றி பவனி வரும் யோகிபாபு இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக சபரிமலையில் நடைபெற்று வருகிறது . குறிப்பாக கடந்த சனிக்கிழமை முதல் யோகிபாபு நடிக்கும் காட்சிகள் இங்கே விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

திரைக்கதை – ராஜேஷ் மோகன்

ஒளிப்பதிவு – வினோத் பாரதி .A

ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவீ

தயாரிப்பு வடிவமைப்பு – வினோத் ரவீந்திரன்

காஸ்டியூம் – அக்ஷயா பிரேமநாத்

புரொடக்ஷன் கண்ட்ரோலர் – ரிச்சர்ட்

இணை தயாரிப்பாளர் – சுஜில் குமார்

இணை இயக்குனர் – தினேஷ் மேனன்

ஒப்பனை – சஜி கொரட்டி

ஸ்டில்ஸ் – ரேனி

லொகேஷன் மேனஜர் – சஜயன்

வடிவமைப்பு – ஆதின் ஒல்லூர்

மக்கள் தொடர்பு – KSK செல்வா

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர் !!
அடுத்த கட்டுரைடிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’