தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற தளபதி விஜய், புரட்சி தளபதி விஷால் இருவரது சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை கண்டு மகிழ்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் தளபதி விஜய். அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் “நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா” என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சந்திப்பின்போது தளபதி விஜய் அவர்களுக்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர் பூங்கொத்து வழங்கினார்கள். ஆனால் நடிகர் விஷால் வழக்கம்போல் பூங்கொத்தை தவிர்த்து, தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார்.

அதன்பிறகு தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை ‘துப்பறிவாளன் 2’ மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய்யிடம் கூறினார் விஷால். மேலும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன் என நடிகர் விஜய்யிடம் கூறியபோது “நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்” என்று விஷாலிடம் கூறி மேலும் அவரை உற்சாகப்படுத்தினார் தளபதி விஜய்.

இந்த சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘மினி ஸ்டூடியோஸ்’ வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்
அடுத்த கட்டுரை“The Great Escape” ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!