“The Great Escape” ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!

இந்திய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! – தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது!

சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! – மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

சௌத் இண்டியன் யுஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கைசாட் பட்டேல், பிரோஸ் பட்டேல் இருவரும் இசையமைக்கிறார்கள். ஒளிப்பதிவு கென்டின், சண்டைப் பயிற்சி சந்தீப் ஜே.எல், எடிட்டிங் ஜெய கிருஷ்ணன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் இயக்குநராக பணியாற்றிய சந்தீப் ஜே.எல், ‘அவுட்ரேஜ்’ (Outrage) படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ‘அவுட்ரேஜ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சந்தீப் ஜே.எல், இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’ அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வரும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதோடு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இந்திய நட்சத்திரங்களின் நடிப்பில், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் சிறந்த ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, தற்போது உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநரும், நடிகருமான சந்தீப் ஜே.எல் கூறுகையில், “அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி, உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் ஜே.எல், சந்தர்ப்ப சூழ்நிலையால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்ள, அவரை அந்த கும்பல் துரத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து நாயகனை மற்றொரு மாஃபியா குழுவின் தலைவன் பாபு ஆண்டனி காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இரண்டு மாஃபியா குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கிறது. இறுதியில் நாயகனை பாபு ஆண்டனி எப்படி காப்பாற்றுகிறார், எதற்காக காப்பாற்றுகிறார், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், மெய் சிலிர்க்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடனுடம் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

மேலும், படத்தில் இடம்பெறுள்ள சண்டைக்காட்சிகள் குறித்து கூறுகையில், “நான் பல படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்த அனுபவங்களை கொண்டு இதுவரை ரசிகர்கள் பாத்திராத ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன். மிக பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் அனைத்தும், ரசிகர்களை கொண்டாட வைக்கும். 5 சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

தாய்லாந்து நாட்டின் பிரபல நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமான சிமோன் குக், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் இடையே இடம்பெறும் சண்டைக்காட்சி ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும்.

சண்டைக்காட்சிகளுடன் படத்தில் ஒரு பாடலும் உள்ளது. ஹாலிவுட்டில் இந்தி மொழியில் பாடல் இருக்கும். தமிழ் மற்றும் மலையாளத்தில் அதே மொழிகளில் அந்த பாடலை உருவாக்கம் செய்திருக்கிறோம். “ரஞ்சிதமே…” பாடல் புகழ் மானசி தமிழ் பாடலை பாடியிருக்கிறார். மலையாள பாடலை பிரபல பாலிவுட் பின்னணி பாடகி சுனிதி செளஹான் பாடியிருக்கிறார்.” என்றார்.

உலகம் முழுவதும் படத்தை வரும் மே மாதம் 12 ஆம் தேதி, ஆங்கிலம் மற்றும் தமிழ், மலையாளத்தில் வெளியாகிறது!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி
அடுத்த கட்டுரைஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு