‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்

இன்று சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் அவர்கள், சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களும் விஷாலுடன் மௌன அஞ்சலியில் பங்கேற்றனர்.

அதன்பிறகு பேசிய விஷால், “விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.
சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். விவசாயி
‘சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!’ என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன்.

கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காகத்தான். அந்த வகையில் சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தின் வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தேவி அறக்கட்டளை மூலம் பல மாணவ, மாணவியர்களை படிக்க வைத்து வருகிறேன். அதற்குத் துணையாக எங்களுடைய தேவி அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இது போன்று எண்ணற்ற மாணவ, மாணவியர்ளை மரிய ஜீனா படிக்க வைத்துவருகிறார் .

நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் நீங்களும் உதவலாம் இங்கு கலந்துகொண்டுள்ள அனைவரும் உங்களால் முடித்தால் ஒரு ரூபாய் கொடுக்க விரும்பினால் உங்களால் ஒரு விவசாயி குடும்பத்துக்கோ அல்லது ஒரு மாணவ, மாணவி படிப்பதற்காகவோ உதவ முடியும். போற்றுவோம் விவசாயத்தை, காப்போம் விவசாயியை..!! இது போன்ற விவசாயம் போற்றும் நிழச்சிகள் அனைத்து மாவட்டங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்” எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார் நடிகர் விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *