மாமன்னன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் கதை

ராசிபுரம் : சமூக நீதி என்ற கட்சியில் அடி மட்ட தொண்டனாக இருந்து தற்போது MLA பதவி வரை வந்திருப்பவர்தான் மாமன்னன் (வடிவேலு), கிட்டத்தட்ட 10 வருடங்களாக MLA பதிவியில் இருக்கிறார். மற்றவர்களை மதிப்பதோடு அனைவரும் சமம் என்கிற கொள்கையில் மாமன்னன் இருக்கிறார். இவரின் மகன்தான் கதையின் நாயகன் அதிவீரன் இவரும் இவரின் தந்தையும் ஒருசில காரணத்தால் பேசுவதில்லை.

பண பலம் , அரசியல் பலம் , ஆள் பலம் என அனைத்தையும் கொண்ட ரத்னவேல் , தன் முன் உட்கார்ந்து கூட யாரும் பேச கூடாது என்ற கேவலமான எண்ணம் கொண்ட அரசியல்வாதியாக இருக்கிறார் , இவர்கள் இருவர்களும் ஒரு விஷயத்தில் மோதிக்கொள்ள நேரிடுகிறது , அப்போது இவர்களுக்குள் நடந்த சாதி அரசியலே படத்தின் மீதி கதை

இந்த கதையினை இயக்குனர் மாரி செல்வராஜ் அவருக்கே உண்டான பாணியில் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
மாமன்னனாக வாழ்ந்த வடிவேலுவின் நடிப்பு
AR . ரஹ்மானின் பாடல்கள் & பின்னணி இசை
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு
மாரி செல்வராஜ் இயக்கம்
அரசியல்பேசும் வசனங்கள்
தரமான இடைவேளை காட்சி

படத்தில் கடுப்பானவை

மேலும் மெழுகேற்றப்படாத 2ம் பாதி கதைக்களம்

Rating : ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று பிரீமியர் ஆகிறது
அடுத்த கட்டுரைபிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்றது