ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, ‘அலா வைகுண்டபுரமுலு’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்தது.

இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக தாங்கள் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இந்த முறை தெலுங்கு பார்வையாளர்களுடன் உலக சினிமா பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் படமாக இது இருக்கும் என்றும் இந்த கூட்டணி உறுதியளிக்கிறது.

‘அலா வைகுண்டபுரமுலு’ படத்தில் இருந்து ‘சமஜவரகமனா, புட்ட பொம்மா, ராமுலோ ராமுலா’ ஆகிய பாடல்கள் ஜென் Z மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது, ​​இந்தியத் திரைகளில் இதுவரை பார்த்திராத காட்சியைக் (Never before seen Visual Spectacle) கொண்டு வர இந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கையும் புதிய அனுபவத்தையும் தருவதை படக்குழு உறுதியளிக்கிறது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் கதை சொல்லும் திறமை இந்தக் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்தையும் மறக்க முடியாததாக ஆக்கியுள்ளது. ‘ரவீந்திர நாராயண்’, ‘விராஜ் ஆனந்த்’ மற்றும் ‘பாண்டு’ போன்ற பாத்திரங்களில் நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் நடிப்பும் உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன.

ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் மீண்டும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் அவர்களின் எட்டாவது பட தயாரிப்புக்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான முந்தைய மூன்று படங்களையும் மிகப்பெரிய பொருட்செலவில் ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்போது, ​​தயாரிப்பு மதிப்புகளை இன்னும் அதிகமாக்கி, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பார்வையாளரையும் திருப்திப்படுத்த உலக அளவிலான தயாரிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான கீதா ஆர்ட்ஸ் பேனர், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் உடன் தயாரிப்பில் இணைகிறது. இதற்கு முன்பு இவர்கள் ‘அலா வைகுந்தபுரமுலு’ படத்திலும் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரைக்கு விருந்தாக வருகிறது
அடுத்த கட்டுரைபிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசர் ஜூலை 6 வெளியாகிறது