சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி இவற்றை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு: மில்லியன் ஸ்டுடியோ,
இயக்கம்: குகன் சென்னியப்பன்,
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்,
படத்தொகுப்பு: நாஷ்,
கலை: சுபேந்தர் பி.எல்.,
ஆக்‌ஷன்: சுதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன்
ஒலி கலவை & வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ஸ்ரீ,
டிஐ லேப்: புரோமோ வொர்க்ஸ்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல்,
ஒப்பனை: மோகன்,
ஸ்டில்ஸ்: விஜய்,
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன்,
நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவிஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
அடுத்த கட்டுரை‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு