லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்க, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற, இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் – ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் – இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்த ஆண்டில், மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுக்க, மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லாலின் அதிரடியான தோற்றம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இணையம் முழுக்க இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

மோகன் லால் ‌- பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் ‘எம்புரான்’ திரைப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
அடுத்த கட்டுரைசென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு