நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது “குய்கோ” திரைப்படம்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மேலும் குடும்பங்கள் அனைத்தும் கொண்டாடும் விதமாக தணிக்கையில் குய்கோ படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைராஜ்குமார் ஹிரானி “டங்கி” மூலம் மற்றொருமுறை திரையில் மாயாஜாலம் நிகழ்த்தவுள்ளார் !!
அடுத்த கட்டுரை‘பார்க்கிங்’ திரைப்படம் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது!