வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா !!

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.

 

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைNominees For Best Web Series 2023
அடுத்த கட்டுரை‘டிமான்டி காலனி 2’ டிரெய்லர் வெளியீட்டு விழா!