‘ஸ்பார்க் L.I.F.E தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது

‘இளம் நாயகன்’ விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘ஸ்பார்க் L.I.F.E’. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார். இப்படத்தை டெஃப் ஃப்ராக் நிறுவனம் தயாரித்துள்ளது.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்‌ தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ‘ஹிருதயம்’ மற்றும் ‘குஷி’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

எதிர்பாராத திருப்பங்களையும் சுவாராசியமான முடிச்சுகளையும் கொண்ட இந்த சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படம்.. நல்ல சக்திக்கும் – தீய சக்திக்கும் இடையேயான போராட்டத்தை கான்செப்டாக கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது இந்த திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய இந்த திரில்லரை.. அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடி வசதியாக குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம். இப்படத்தில் நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணிலா கிஷோர், சத்யா, பிரம்மாஜி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், அன்னபூர்ணம்மா, சம்மக் சந்திரா, ராஜா ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைNominees For Best Song 2023
அடுத்த கட்டுரை“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா