தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் விதிமுறைகள் மற்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது.
10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு:
சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் நோர்வே தமிழ் திரைப்பட குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில் 2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்சித் அவர்களால் தயாரிக்கப்பட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு உருவான ‘பரியேறும் பெருமாள்” திரைப்படம் அதி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே போல நடுவர்களால் சிறந்த இயக்குனராக “மேற்கு தொடர்ச்சி மலை” இயக்குனர் லெனின் பாரதியும், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக திரிஷா கிருஷ்ணன் அவர்களும் 96 திரைப்படத்தில் நடித்தமைக்காக தமிழர் விருதினை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
நோர்வேயில் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்களுக்கான சிறந்த திறமைசாலிகள் தேர்வு செய்யப்பட்டு “தமிழர் விருதுகள்” வழங்கப்பட்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதே மொழித் திரைப்படங்களுக்கான திரையிடலும், போட்டிகளும் நடைபெற்று தமிழர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வெளியான திரைப்படங்களில் 2019-ஆண்டுக்கான ஏனைய திரைப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ‘கனா’ திரைப்படத்தை தயாரித்தமைக்காகவும், சிறந்த இசையமைப்பாளராக ‘பரியேறும் பெருமாள்’, ‘வட சென்னை ’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தேர்வாகியிருக்கின்றனர்.
மேலும் சிறந்த பாடகிக்கான விருது ‘96’ படத்தில் காதலே காதலே என்ற பாடலை பாடியதற்காக சின்மயீ ஸ்ரீபடா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘தான சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சொடக்கு மேல, அடி வெள்ளக்கார என்ற பாடலைகளைப் பாடிய அந்தோணி தாசனுக்கு வழங்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர், நடிகர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கலைச்சிகரம் விருது நடிகர், நகைச்சுவையாளர் விவேக் அவர்களுக்கு சமூக அக்கறையுடன் உழைப்பவர் என்ற காரணத்திற்க்காக வழங்கப்படுகின்றது.
தமிழ்மொழியின்சிறப்புகள்பற்றிஎடுத்துச்சொல்லி, கலை, பண்பாடு, வரலாறுஅடையாளம்தொடர்பாகவேற்று இனத்தவர்கள்
கற்றுக்கொள்ளக்கூடியசூழ்நிலைகளைஉருவாக்கி, நெருகங்கிய தொடர்புகளைநோர்வேதமிழ்திரைப்படவிழாதொடர்ந்து வளர்த்துவருகின்றது. நோர்வேயியஅரசின், ஒஸ்லோ, லோரன்ஸ்கூ நகரசபைகளின்மிகப்பெரியஅங்கீகாரத்தினைபெற்றுசிறப்பான விழாவாகஉருவெடுத்துள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழா நோர்வேயின் தலைநகரமான ஒசுலோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது. தமிழர் விருதினை நோர்வே நாட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள உள்ள கலைஞர்கள் தொடர்புகொள்ள:
ஏனைய பிரிவுகளில் தமிழர் விருது பெற்றவர்களின் விபரங்கள் கீழே தருகின்றோம்.
10 வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா 2019 குழுவினால்
தெரிவான 20 திரைப்படங்கள்:
01.பெரியேறும் பெருமாள்- மாரி செல்வராஜ்
02.மேற்கு தொடர்ச்சி மலை -லெனின் பாரதி
03.கனா – அருண் ராஜா காமராஜ்
04.96 – பிரேம்குமார்
05.கடைக்குட்டி சிங்கம் – பாண்டிராஜ்
06.வட சென்னை – வெற்றிமாறன்
07.இரும்புத்திரை – பி.எஸ்.மித்திரன்
08.காற்றின் மொழி – ராதாமோகன்
09.நடிகையர் திலகம் – நாக் அஸ்வின்
10.காலா – பா.ரஞ்சித்
11.லட்சுமி – ஏ.எல்.விஜய்
12.சீதக்காதி பாலாஜி தரணிதரன்
13.ஒரு குப்பைக் கதை – காளி ரங்கசாமி
14.கோலமாவு கோகிலா -நெல்சன்
15.அடங்க மறு -கார்த்திக் தங்கவேல்
16. ராட்சசன் – ராம்குமார்
17. இமைக்கா நொடிகள் – ஆர்.அஜய் ஞானமுத்து
18.டிக்.டிக் – சக்தி சவுந்தர் ராஜன்
19.பியார் பிரேமா காதல் – இளன்
20. அண்ணனுக்கு ஜே
YouTube Subscribe to our Youtube Channel
Thamizh Padam for the latest Kollywood updates.