மூத்தகுடி தமிழ் திரைப்பட விமர்சனம்

மூத்தகுடி கதை

மூத்தகுடி என்கிற பகுதியில் அரசாங்கம் மதுபானக்கடை திறக்க கூடாது என்பதற்காக, ஒரு வயசானவருடன் இணைந்து ஊர் மக்களும் போராட்டம் செய்கின்றனர். அப்போது அங்குவரும் பத்திரிகையாளர் வயசானவரிடம் எதற்காக இந்த பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர் 1970 ல் மூக்கம்மாவின் குடும்பம் ஒரு விபத்தில் இறந்துவிட்டது அதற்கு காரணம் இந்த மதுபானம்தான், அப்போது இருந்து இந்த பகுதியில் இருக்கும் யாரும் குடிக்க கூடாது, மதுபானக்கடை திறக்கக்கூடாது என மூக்கம்மா ஊர் மக்களுடன் இணைந்து முடிவெடுக்கிறார்.

Read Also: Mathimaran Tamil Movie Review

ஒருகட்டத்திற்கு மேல் ஊரில் உள்ள முக்கியமான நபர் ஒருவர் எப்படியாவது மூத்தகுடியில் இடம் வாங்கி ஒரு மதுபான தொழிற்சாலை அமைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இந்த திட்டத்திற்கு மூக்கம்மாவின் பேரன் வீரய்யன் உதவி செய்கிறார். வீரய்யன் உதவி செய்ததனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதும், கடைசியில் ஊர் மக்களின் போராட்டம் வென்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ரவி பார்கவன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பனவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡கடுப்பேத்தும் காமெடிகள்
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡விறுவிறுப்பற்ற திரைக்கதை

Rating: ( 2.25/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமூன்றாம் மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்