நந்திவர்மன் தமிழ் திரைப்பட விமர்சனம்

நந்திவர்மன் கதை

செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வரமாட்டார்கள், அப்படி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமந்த புரத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த ஊரில் பல்லவ அரசன் நந்திவர்மன் கட்டிய சிவன் கோவில் மண்ணில் புதைந்திருக்கிறது, அதனை தோண்டியெடுக்க செல்கிறார்கள்.

அனுமந்த புரத்திற்கு சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் குரு செல்கிறார். அங்கு சென்ற பிறகு இவர்கள் பூமியில் தோண்ட தோண்ட அங்கு ஒவ்வொரு பிரச்சனையாக வெடிக்கிறது. மற்றும் ஊர் மக்களும் மர்மமான முறையில் இறக்கின்றனர். கடைசியில் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதும், மக்கள் மர்மமான முறையில் இறப்பதற்கு காரணமும், இந்த பிரச்னையெல்லாம் தாண்டி நந்திவர்மன் கோவிலை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் GV. பெருமாள் வரதன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் வேகத்தை குறைக்கும் காதல் காட்சிகள்
➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது
அடுத்த கட்டுரைமதிமாறன் தமிழ் திரைப்பட விமர்சனம்