மெரி கிறிஸ்துமஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் கதை

துபாயில் இருந்து 7 வருடங்கள் கழித்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மும்பைக்கு வருகிறார், கதையின் நாயகன் ஆல்பர்ட். மும்பை வந்து பார்த்தால் அவரின் அம்மா ஏற்கனவே இறந்துபோன விஷயம் தெரியவருகிறது, அதன் பிறகு அவர் ஒரு பாருக்கு செல்கிறார். அங்கு அவர் கதையின் நாயகி மரியாவையும், அவரின் குழந்தைகளையும் பார்க்கிறார், மீண்டும் எதார்த்தமாக அன்றைக்கே 2 முறை மரியாவை சந்திக்கிறார் ஆல்பர்ட்.

ஆல்பர்ட், மரியாவுக்கு ஒரு உதவி செய்கிறார், அதனால் மரியா ஆல்பர்ட்டை தனது வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் வீட்டிற்கு சென்று பார்த்தால் மரியாவின் கணவர் இறந்துகிடக்கிறார். அதனை பார்த்து இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர், அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதும், மரியாவின் கணவரின் இறப்பிற்கு என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை…

படத்தில் சிறப்பானவை

➡விஜய் சேதுபதி& கத்ரீனா நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’
அடுத்த கட்டுரைகேப்டன் மில்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்