ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இனியா கடந்த ஆண்டு துவங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.

நடிகை இனியாவின் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பான சந்திப்பாக அமைந்தது. இதில் திரை பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடிகை இனியா மற்றும் அவரது அனோரா ஆர்ட் ஸ்டூடியோவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து மழையில் நனைந்த இனியா தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
அடுத்த கட்டுரைRC studios சார்பில் 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் R.சந்துரு!!