நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியானது

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது அற்பதமான நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில் ‘கூடாச்சாரி’, ‘மேஜர்’ போன்ற வெற்றிப் படைப்புகளை வழங்கிய சோபிதா, தற்போது சர்வதேச அரங்கில் நுழையத் தயாராகிவிட்டார்.

தேவ் படேல் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற ஜோர்டான் பீலேவுடன் இணைந்து யுனிவர்சல் பிக்சர்ஸின் தயாரிப்பான “மங்கி மேன்” என்ற த்ரில்லர் படத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். “விப்லாஷ்” போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட “மங்கி மேன்” திரைப்படத்தின் ட்ரெய்லர் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சோபிதா துலிபாலாவின் ஹாலிவுட் அறிமுகம் குறித்த கூடுதல் அப்டேட்டிற்காகக் காத்திருங்கள்.

Trailer Link: youtu.be/g8zxiB5Qhsc?si=BqfqiP1JtyeaJ6rv

தேவ் படேல் இயக்கத்தில், சோபிதா துலிபாலா நடிப்பில் தயாரான ‘மங்கி மேன்’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநாகேஷின் பேரன் ( ஆனந்தபாபுவின் இளையமகன்) கதாநாயகனாக அறிமுகமாகிறார்
அடுத்த கட்டுரைமறக்குமா நெஞ்சம் தமிழ் திரைப்பட விமர்சனம்