“பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘விருமாண்டி’ அபிராமி நடிக்கின்றார்.

இப்பட குழுவினரை சமீபத்தில் பார்த்த நடிகர் சூரி “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினரும் நடிகர் சூரிக்கு ‘விடுதலை Part1’ வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

“பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள்
அயாஸ்
நரேந்திர பிரசாத்
அம்மு அபிராமி
‘விருமாண்டி’ அபிராமி
RJ விக்னேஷ்காந்த்
சுப்பு பஞ்சு
சுரேஷ் சக்ரவர்த்தி
போஸ் வெங்கட்
வினோதினி வைத்தியநாதன்
சேட்டை ஷெரீப்
மதுரை முத்து
கேபிஒய் பழனி
ஓஏகே சுந்தர்
நக்கலைட்ஸ் பிரசன்னா
நக்கலைட்ஸ் தனம்

தொழில்நுட்ப வல்லுநர்கள்

ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன்
இசை சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் – ‘உறியடி’ விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் – கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த்.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – ராகுல்
இயக்கம் – ராஜ்மோகன் ஆறுமுகம்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்
அடுத்த கட்டுரைட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’ – பிரதான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா