இயக்குனர் கோகுல் உடன் முதல்முறையாக இணையும் நடிகர் விஷ்ணு விஷால்

2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள “ஆர்யன்” படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக உருவாகி வருகிறது.

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகவுள்ள விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் 10 திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக உருவாக்கப்படவுள்ளது.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்‌ஷன் நம்பர் 10′ திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துவரும், தற்போதைய திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்கும். தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகளை துவக்கியுள்ளோம். விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்.

எங்களின் இந்த புதிய பயணத்தில் எப்போதும் போல், உங்கள் ஆதரவையும் அன்பையும் வழங்க வேண்டுகிறோம்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைWINNER OF THAMIZHPADAM VIEWER’S CHOICE 2023
அடுத்த கட்டுரை‘தேவரா’ படத்தின் முதல் பாகத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!