“சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் இருக்கும்” – நடிகை மடோனா செபாஸ்டியன்!

நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் ‘செலின்’ என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவரது அற்புதமான நடிப்பு கோலிவுட்டில் பாராட்டுகளை வாங்கித் தந்தது. அதேபோல, தனுஷின் ’பா. பாண்டி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது ஆக்‌ஷன் அவதாரம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்போது நடிகர் பிரபுதேவாவுடன் அவர் நடித்திருக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, “இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானது. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். ஆனால், இயக்குநர் சக்தி சிதம்பரம் சார் இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். எனக்கும் மட்டுமல்ல நடிகர்கள் அபிராமி, யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற அனைத்து பெண் நடிகைகளுக்கும் சிறப்பான கதாபாத்திரம் இதில் இருக்கிறது.
’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம் சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும். டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இதில் உள்ளது. பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும் அவருடன் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது” என்றார்.

’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படத்தை ட்ரான்சிண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் ராஜன் மற்றும் நீலா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநிறங்கள் மூன்று படத்தை பற்றி பேசிய நடிகர் ரஹ்மான்
அடுத்த கட்டுரைபொங்கலுக்கு வெளியாகும் ‘வணங்கான்’