ஜோடியாக தடுப்பூசி போட்டு கொண்ட நயன்தாரா விக்னேஷ் !!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தி வருகிறது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்வதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இருவரும் ஜோடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது தெரிந்ததே.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here