அடியே தமிழ் திரைப்பட விமர்சனம்

அடியே கதை

கதையின் நாயகன் ஜீவா சிறுவயதில் தன் பெற்றோரை இழந்துவிடுகிறார். நண்பர்களுடன் வளர்ந்துவரும் ஜீவாவுக்கு வாழவே பிடிக்காமல் இறந்துவிடலாம் என முடிவு செய்கிறார். அப்போது டீவியில் பிரபல பின்னணி பாடகி செந்தாழினி கொடுக்கும் பேட்டியை பார்க்கிறார், அந்த பேட்டியில் தன் முதல் ரசிகனை பற்றி பேசிக்கொண்டிருப்பார் செந்தாழினி.

அந்த ரசிகன் நான் தான் என செந்தாழினியிடம் கூற முயற்சிக்கிறான் ஜீவா, ஆனால் அது முடியாமல் போகிறது, பிறகு சரக்கு அடித்துவிட்டு ரோட்டோரம் தூங்கி எழுந்தால் வேறொரு இடத்தில இருக்கிறான் ஜீவா, யாரிடம் பேச வேண்டும் நினைத்தாரோ அவரே மனைவியாக இருக்குறார். தான் எங்கு இருக்கிறோம் என்ன நடக்கிறது என புரியாமல் வேறு உலகத்தில் இருக்கும் ஜீவா இவை அனைத்திற்கும் என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து நிஜ உலகத்தில் தன் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் சற்று வித்யாசமாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

வித்யாசமான கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பாடல்கள் & பின்னணி இசை
விறுவிறுப்பான இரண்டாம்பாதி கதைக்களம்

படத்தில் கடுப்பானவை

பெரிதாக ஒன்றும் இல்லை

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *