புதிய தோற்றத்தில் அஜித் – வைரல் ஆகும் புகைப்படம் !!

அண்மையில் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தொடங்கி பிரதமர் மோடி வரை அணுகி ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கொண்டிருந்ததை அடுத்து அஜித் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் இப்படி செய்வது வருத்தமுறச் செய்வதாகவும் வலிமை தொடர்பான விபரங்கள் குறித்த நேரத்தில் நிர்ணயிக்கப்படும், அதுவரை பொறுமை காத்து இருக்கவும் என கோரினார்.

இதனிடையே வலிமை படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தான் வேப்பேரி கமிஷன் அலுவலகத்திற்கு அஜித் வருகை தந்தார். அவர் வந்ததை பார்த்த ரசிகர்கள் திடீரென பரவசமாகி விட்டனர். எனினும் ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சிலரிடம் மாஸ்க் அணிந்தபடி பேசிக்கொண்டிருந்தார். அவரின் இந்த தோற்றம் மிகவும் எதார்த்தமானதாகவும், திரையில் காண முடியாத ஒன்றாகவும் இருந்துள்ளது. குறிப்பாக அஜித் பயிற்சி துப்பாக்கிச் சூடு நிகழ்விடமான Rifil club இங்கு உள்ளதாக நினைத்து அஜித் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் Rifil club அமைந்துள்ள பழைய கமிஷனர் அலுவலகம் நோக்கி அஜித் புறப்பட்டார்.

தற்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச்.வினோத், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் அஜித் நடித்தார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வலிமை பாடல் பணிகளை மேற்கொள்ளும் வீடியோவும் அண்மையில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here