அங்கீகாரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் (2026) – முன்னோட்டம்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குனரான தென்பாதியான் இயக்கத்தில், புதுமுக நடிகர் KJR ராஜேஷ் (கோட்டபாடி ஜே ராஜேஷ்), சிந்துரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஜிப்ரானின் இசையில் வெளியாகியுள்ள ஒரு ஸ்போர்ட்ஸ்-அரசியல் மற்றும் கோர்ட்ரூம் டிராமா (Sports-Courtroom Drama) திரைப்படம் தான் இந்த ‘அங்கீகாரம்’. கே.ஜே. ராஜேஷை இதற்கு முன் தயாரிப்பாளராக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

அங்கீகாரம் கதை

சென்னையின் ஏழை சேரிப் பகுதிகளில் (Slum) பிறந்து வளர்ந்த ஆதிரன் (KJR ராஜேஷ்) ஓட்டப்பந்தயத்தில் (Running) மிகுந்த திறமைசாலி. தனது கடுமையான உழைப்பால் காமன்வெல்த் போட்டியில் (Commonwealth Games) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார். ஆனால், விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல், சாதிய ஒடுக்குமுறை மற்றும் அதிகார வர்க்கத்தின் தலையீட்டால் அவரது வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறது.

இதற்குப் பொறுப்பான அமைச்சர் (மன்சூர் அலிகான்) மற்றும் விளையாட்டு வாரியத்திற்கு எதிராக, தனது பயிற்சியாளரின் (வசுந்தரா காஷ்யப்) துணையோடு ஆதிரன் எப்படி சட்டப் போராட்டம் நடத்துகிறார்? இறுதியில் அவருக்கு நியாயமான ‘அங்கீகாரம்’ கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.

அங்கீகாரம் – விளையாட்டுத் துறையின் அரசியலைத் தோலுரிக்கும் ஒரு நேர்மையான முயற்சி!

சில வணிக ரீதியான சினிமா சமரசங்கள் மற்றும் வழக்கமான திரைக்கதை அமைப்பு இருந்தாலும், அது பேச எடுத்துக்கொண்ட சமூகக் கருத்து மற்றும் நடிகர்களின் நேர்மையான உழைப்பிற்காக இந்த ‘அங்கீகாரம்’ படத்திற்குத் தாராளமாக தியேட்டரில் ஒருமுறை பார்க்கலாம்.

Read Also: Heartin Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡KJR ராஜேஷின் அர்ப்பணிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡இரண்டாம் பாதி
➡ஜிப்ரானின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡ நீதிமன்ற காட்சிகள், வசனம்

படத்தில் கடுப்பானவை

➡முதல் பாதியில் ஏற்பட்ட தொய்வு
➡யூகிக்கக்கூடிய திரைக்கதை

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஹார்ட்டின் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைகான் சிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்