வெளியானது சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம்  தனது அறிமுக இயக்கத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை தந்து, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அப்படத்தின் இந்தி ரீமேக்கான  “கபீர் சிங்” மூலம் பாலிவுட்டை அதிர வைத்தவர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் படத்தை இயக்குகிறார். இந்தியா முழுமைக்கும் திரை ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்த புத்தாண்டு தினத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில்,  தயாரிப்பாளர்கள் அனிமல்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டலான ஆக்சன் அவதாரத்தில் ரன்பீர் கபூர் அசத்துகிறார். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் மாறுபட்ட ஆக்‌ஷன் டிராமாவாக  இப்படம் உருவாகிறது. ரன்பீர்  முதன்முறையாக இப்படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன், கூர்மையான கோடரியுடன் இருக்கும்  ரன்பீரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.  இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் ரசிகர்களை மிரள வைக்கும் அழுத்தமான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா

தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா
தயாரிப்பு நிறுவனம் : டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் –  சிவா ( AIM )  தமிழ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘கஸ்டடி’ படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது
அடுத்த கட்டுரைபரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்.