அஞ்சலி நடிக்கும் “ஈகை” படத்தின் துவக்க விழா

இயக்குனர் இமையம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் , காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கிரீன் அமூசிமெண்ட் மற்றும்
D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கும்
இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா , தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி முன்னிலையில் துவங்கப்பட்டது.

தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த “ஈகை” என்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம்.

படத்திற்கு தரன்குமார் இசையமைக்கிறார்,
ஒளிப்பதிவு ஸ்ரீதர்,
எடிட்டர் பிரவீன் KL,
கலை – த .இராமலிங்கம்.
நடனம் – ஸ்ரீதர்
பாடல்கள் – விவேகா, அறிவு
சண்டை- கணேஷ்.

தயாரிப்பு – தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபாயும் ஒளி நீ எனக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைநிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு