அந்த நாள் கதை
கதையின் நாயகன் ஸ்ரீ ஒரு இயக்குனர். இவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறது, தனக்கு கனவில் வருவதையே ஒரு கதையாக தயார் செய்கிறார். இந்த கதை மாந்திரிகம் மற்றும் நரபலி சார்ந்த ஒரு பேய் படம். அந்த கதையை ஒரு தயாரிப்பாளரிடம் கூறி, படம் எடுப்பதற்கான Pre-production பணிக்காக ஒரு இடம் கேட்க, தயாரிப்பாளர் ECR பக்கம் ஒரு இடத்தை சொல்கிறார்.
Read Also: Once Upon A Time In Madras Tamil Movie Review
Pre-production பணிக்காக இயக்குனர் ஸ்ரீ தனது உதவியாளர்களை அழைத்துக்கொண்டு ECR – ல் உள்ள பஞ்சமி பங்களாவிற்கு செல்கின்றனர். அங்கு இவர்களுக்கு சில விஷயங்கள் அமனுஷியாமாக நடக்கிறது. அங்கிருந்து வெளியேற நினைத்தால், சில தடங்கல்கள் வருகிறது கடைசியில் இவர்களுக்கு என்னதான் ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை நாயகன் ஆர்யன் ஷியாம் எழுத, அறிமுக இயக்குனர் விவி கதிரேசன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ஆர்யன் ஷியாம் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் எடுக்கப்பட்ட விதம்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .75 / 5 )