அரணம் தமிழ் திரைப்பட விமர்சனம்

அரணம் கதை

அறந்தாங்கியில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர், அவர் ஊருக்காக பல நல்ல விஷயங்களை செய்கிறார். ஆனால் அவரின் மகன் மாயவனின் செயல் அப்படியே தலைக்கீழாக இருக்கும். இவர் குடித்துக்கொண்டு ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இவரை மக்கள் யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால் தனது அப்பாவிடம் சொத்துக்களை பிரித்துத்தருமாறு கேட்கிறான். அதே சமயம் மாயவனின் அப்பா இரண்டு அனாதை குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார், அவர்களின் பெயர் கதிர்வேல், சக்திவேல்.

ஒருநாள் மாயவன் தனது தந்தையை கொலை செய்ய வரும்போது, எதிர்பாராமல் இறந்துவிடுகிறார். மகன் இறந்த சில வருடங்கள் கழித்து தந்தையும் இறந்துவிடுகிறார். கதிர்வேல் திருமணமாகி தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்து, இனிமேல் இந்த வீட்டை நாம் தான் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வருகிறார். அப்போது அந்த வீட்டில் சில அமனுஷிய விஷயங்கள் நடக்கிறது. அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதும், அந்த அமானுஷியத்திற்கு என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை பாடலாசிரியர் பிரியன் இயக்கி, நடித்துள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *