தமிழ் சினிமாவில் வாரம் வாரம் பல பல புதிய படங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது, அதில் சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன, சில படங்கள் நன்றாக இருந்தும் மக்கள் கவனிக்க மறக்கின்றனர், அப்படி இந்த வாரம் வெளியான படங்களின் விமர்சனத்தை பார்ப்போம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது காரணம், முதல் பாதியில் காமெடியும் இரண்டாம் பாதியில் தந்தையின் உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஐங்கரன் படம், சாதிக்க துடிக்கும் இளைங்கர்களுக்கு ஒரு விடிவெள்ளியாக அமைந்துள்ளது
சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான ரங்கா திரைப்படம் இன்றைய சூழலில் திருமண தம்பதியினருக்கு ஏற்படும் சில எதிர் கொள்ள முடியாத பிரச்சனைகளை நமக்கு உணர்த்துகிறது
இந்த மூன்று திரைப்படத்தின் திரை விமர்சனத்தை பார்த்து உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து இந்த வார இறுதியை திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து மகிழுங்கள், மற்றும் உங்களுக்கு பிடித்த திரைப்படத்தை கமெண்ட் செய்யுங்கள்































