பயாஸ்கோப் கதை
கதையின் நாயகன் ராஜா, சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டு இருக்கிறார். ஒருநாள் ராஜாவின் சித்தப்பா தன் எதிர்காலத்தை பற்றி சாமியார் சொன்னதை நம்பி, அந்த பயத்திலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பார். சித்தப்பாவின் இழப்பு ராஜாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.
மூட நம்பிக்கையை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த ராஜா, மூட நம்பிக்கைக்கு எதிராக வெங்காயம் என்ற படம் எடுக்க முடிவெடுக்கிறார். ஆனால் படம் எடுக்க பண ரீதியாக பல பிரச்சனைகள் வருகிறது, இவையெல்லாம் சமாளித்து படத்தை எடுத்தாரா? இல்லையா? வெங்காயம் படம் வெளியானதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், நடித்து இயக்கியுள்ளார்.
இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும்.
Read Also : 35 Chinna Vishayam Illa Tamil Movie Review