பிளாக் தமிழ் திரைப்பட விமர்சனம்

பிளாக் கதை

கதையின் நாயகன் வசந்த் மற்றும் கதையின் நாயகி ஆரண்யா இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறது. ஒருநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் வசந்த் ஒருவனை போட்டு அடிக்கிறார். ஆரண்யா அதனை பார்த்து பயப்படுகிறார், வசந்த்திடம் அடிவாங்கியவன் வசந்த்-ன் காரை சேதப்படுத்திவிட்டு செல்கிறான்.

Read Also: Vettaiyan Tamil Movie Review

பிரச்சனை நடந்த மறுநாள் வசந்த் நண்பர்களுடன் வெளியில் செல்வதாக சொல்கிறார். ஆனால் ஆரண்யா நம்முடன் பிரச்னை செய்தவன் நம்மை பின் தொடருவான் என பயந்து, நாம் புதிதாக வாங்கிய வில்லாவிற்கு செல்லலாம் என சொல்கிறார், பிறகு இருவரும் வில்லாவிற்கு செல்கிறார்கள். சென்ற இடத்தில், அருகில் உள்ள வீடுகளில் யாரும் இல்லாமல் இருக்கிறார்கள். பிறகு அங்கு அவர்களுக்கு பல அமானுஷிய விஷயங்கள் நடக்கிறது, இவையெல்லாம் ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது, இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் KG . பாலசுப்ரமணி சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஜீவா & ப்ரியா நடிப்பு
➡கதைக்கரு
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு
➡ஒளிப்பதிவு
➡மிரள வைக்கும் ஒருசில காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡தெளிவாக இல்லாத இரண்டாம்பாதி கதைக்களம்

ரேட்டிங்: (3.25 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைZEE5 -ல் வெளியானது வேதா திரைப்படம்!!!
அடுத்த கட்டுரைஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!