ப்ளடி பெக்கர் கதை
கதையின் நாயகன் ஒரு பிச்சைக்காரன் (Kavin), இவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மக்களை ஏமாற்றி பிச்சை எடுப்பான். ஒருநாள் கை இல்லாதவன் போலும், ஒருநாள் கால் இல்லாதவன் போலும், ஒருநாள் கண் தெரியாதவன் போலும் நடித்து மக்களை ஏமாற்றி பிச்சை எடுக்கிறான். இவனுடன் ஜாக் என்று பையன் இருக்கிறான் அவன் பேனா வித்து உழைத்து சாப்பிடுகிறான்.
Read Also: Lucky Baskhar Tamil Movie Review
பிச்சைக்காரனுக்கு ஒருநாள் ராஜ விருந்துடன் மிக பெரிய மாளிகையில் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது அவன் அந்த மாளிகைக்குள் சென்று சுற்றி பார்க்கிறான், எதிர்பாராத விதமாக அங்கு உள்ளவர்களிடம் மாட்டிக்கொள்கிறான் அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கவினின் நடிப்பு
➡கதைக்கரு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡பின்னணி இசை
➡சிரிக்கவைத்த சில காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .75 / 5 )