‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   இணைந்துள்ளார் !

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பிரமாண்டமான பான் – இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை  தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறுகையில்,
“ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை.  இந்த ‘கேடி’ போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார்.

KVN Productions வழங்கும் KD-The Devil  ‘கேடி தி டெவில்’  படத்தை இயக்குநர் பிரேம் இயக்குகிறார். துருவா சர்ஜா, ரவிச்சந்திரா, சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் நடிக்கும்,  இந்த பான்-இந்தியா பன்மொழி திரைப்படம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
அடுத்த கட்டுரைஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!