பாட்டில் ராதா கதை
கதையின் நாயகன் ராதா மணி, கொத்தனார் வேலை செய்கிறார். இவர் எப்போதும் குடித்துக்கொண்டு, ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்குவதே இவரின் முக்கிய வேலையாக இருக்கிறது. ராதாவால் பாதிக்கப்பட்ட மனைவி, ராதாவை மறுவாழ்வு மையத்தில் ( Rehab center ) சேர்த்துவிடுகிறார்.
மறுவாழ்வு மையத்தில் இவர்களை நடத்தும் விதம், மற்றும் ஒருசில காரணங்களால் இவரால் இருக்க முடியாமல் போகிறது. எப்படியாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் என நினைக்கிறார் ராதா. இவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததால் மனைவி மீது பெருங்கோபம் கொள்கிறார். கடைசியில் ராதா குடியை விட்டு வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡குரு சோமசுந்தரம் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡சுற்றிவளைக்கும் திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .75 / 5 )