பிரம்மாஸ்திராவின் முதல் முழு நீள டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கற்பனை சாகசப் படம். பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: சிவா இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு பரந்த கதையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது

இந்த ட்ரைலரில் நான் கவனித்த இந்த விஷயங்களை நீங்கள் கவனித்தீர்களா…

இந்த ட்ரைலரில் 0:05 வினாடியில் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரியினை நாகார்ஜுனா தனது சக்திகளை பயன்படுத்தி தாக்குகிறார் எதற்காக இருக்கும்?
0:09 வினாடியில் நீர் சக்தி கொண்ட ஒரு பெண் நடந்து வருகிறாள் அவள் யாராக இருக்கும் ?
0:11 வினாடியில் காற்று சக்தி கொண்ட ஒருவர் குதிரையில் செல்கிறார் அவர் யார் ?
0:13 வினாடியில் நெருப்பு சக்தி கொண்ட ஒருவர் நெருப்பை கட்டுப்படுத்திக்கொண்டு உள்ளார் அவர் யார் ?
0:23 வினாடியில் ஒருவர் தனது சக்தியால் ஒரு பெரிய உருவத்தை உருவாக்கி வானில் பறக்கிறார் அவர் யார் ?
0:26 வினாடியில் ஒரு பெண் கையில் பிரமாண்ட பொருள் உள்ளது ஒருவேளை அதுதான் பிரம்மாஸ்திரமோ ?
0:48 வினாடியில் ரன்பீர் உள்ள இடத்தில் ஆலியாவும் உள்ளார் அப்போது ரன்பீருக்கு ஒரு புதுவித உணர்வு ஏற்படுகிறது.. ஆலியாவை தொடர்கிறார் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள்
1:05 நிமிடத்தில் ஆலியாவுக்கு ரன்பீரின் சக்தி பற்றி தெரியவருகிறது
1:20 நிமிடத்தில் தீய சக்திகள் ரன்பீரை தாக்குகிறார்கள் அப்போது அவரின் முகம் சற்று கோரமாக மாறுகிறது
1:26 நிமிடத்தில் பலர் ஒன்று சேர்ந்து சக்திகளை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்
1:28 வினாடியில் அமிதாப் பச்சன் ஒருவரை தாக்குகிறார் அவர் யார்?
1:31 வினாடியில் நாகார்ஜூனா கண்களில் ஒருவித தீய சக்தி தெரிகிறது மற்றும் அவர் இரண்டு சக்திகளை கட்டுப்படுத்துகிறார்… நாகார்ஜுனா நல்லவரா கெட்டவரா?
1:36 வினாடியில் ரன்பீரை மிகவும் சக்திபடைத்த பெரிய உருவம் அவர்முன் நிற்கிறது
1:37 வினாடியில் ஒருவரை எருமைமாடு உருவம் கொண்ட ஒரு சக்தி துரத்துகிறது
1:39 வினாடியில் மௌனி ராய் சக்தி தான் அந்த எருமைமாட்டை கட்டுப்படுத்துகிறது என்பது அந்த சக்தியின் கலரில் தெரிகிறது
1:45 வினாடியில் மௌனி ராய் பிரம்மாஸ்திரத்தை அடைய ஒரு படையையே உருவாக்கி வைத்துள்ளார் அதனால் இவர்தான் வில்லி என்பது இதிலிருந்தே தெரிகிறது
1:49 வினாடியில் அமிதாப் பச்சன் ரன்பீருக்கு அஸ்திரத்தை பற்றியும் அதனை பயன்படுத்தும் முறையை பற்றியும் கற்றுக்கொடுக்கிறார் காரணம் ரன்பீரும் ஒரு அஸ்திரம்தான் அதுவும் அக்னி அஸ்திரம் என்பதை அப்பொழுதுதான் ரன்பீருக்கு தெரியப்படுத்துகிறார்
2:10 வினாடியிலிருந்து பலர் அவர்களின் சக்தியை பயன்படுத்துகிறார்கள் ஒருவேளை நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் போர் நடக்கிறதோ?
2:14 வினாடியில் ஒருவர் பச்சை கலர் சக்தியை பயன்படுத்துகிறார் ஒருவேளை மூன்று சக்தியை தாண்டி நான்காவதாக ஒரு சக்தி உள்ளதோ ?
2:16 வினாடியில் ஆலியா தீயசக்தியிடமிருந்து ஒரு குழந்தையை காப்பாற்றுகிறார் அந்த குழந்தை யார் ?
2:20 வினாடியில் நாகார்ஜுனா சிலரை காப்பாற்றுகிறார் அவர்கள் யார் ?
2:40 வினாடியில் ஆலியாவை ரன்பீர் காப்பாற்ற முயல்கிறார் காப்பாற்றினாரா ?

இப்படி இந்த ட்ரைலரில் நமக்கு பல கேள்விகள் உள்ளன…
ட்ரைலரில் பலருக்கும் பல சக்திகள் உள்ளன மற்றும் காதல், ஒளி, நெருப்பு, இவை மூன்றுக்கும் இடையே இருக்கும் கதாநாயகன் அனைத்தையும் கட்டுப்படுத்தினரா, பிரம்மஸ்திரத்தை தேடிவரும் தீயவர்களை அழித்தாரா என்பதை செப்டம்பரில் திரையரங்கிற்கு சென்று பார்ப்போம்

 

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here