பிரம்மாஸ்திராவின் முதல் முழு நீள டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கற்பனை சாகசப் படம். பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: சிவா இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு பரந்த கதையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. பழங்கால அஸ்திரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒரு மனிதனை (ரன்பீர் கபூரின் சிவன்) சுற்றி வரும் படத்தின் முக்கிய கதைக்களத்தை டிரெய்லர் வழங்குகிறது.
அமிதாப் பச்சன் வெளிவரவிருக்கும் கதையை விவரிக்கும்போது அவரது குரல்வழியுடன் டிரெய்லர் திறக்கிறது. நீர், காற்று, நெருப்பு என பல சக்திகளை பற்றி விவரிக்கும் பிரம்மாஸ்திர படத்திலிருந்து வந்த 2.51 நிமிட நீளமுள்ள ட்ரைலரில் நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சிகள் பல உள்ளன ட்ரைலரின் ஆரம்பமே மிக பிரமாண்டமாக தொடங்குகிறது அதில் குறிப்பாக 1:04 நிமிடத்தில் ஷிவாவின் (ரன்பீர் கபூர்) கையில் நெருப்பு பற்றிக்கொள்வதும் அதனை கண்ட ஈஷா (ஆலியா) பதட்டப்படுவதும் நமக்கு சிலிர்பையும் ஒருவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது, 1:25 நிமிட காட்சியில் பிரம்மாஸ்திரத்தின் பிரமாண்டம் நம்மை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது தொடர்ந்து அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் காட்சிகள் வருகின்றன இவையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் ஒ
ரு வினாடி மார்வெல் விஷுவலுக்குள் சென்று வந்த உணர்வு வந்துவிட்டது, பிரம்மாஸ்திரவின் முதலாம் பாகமான ஷிவா செப்டம்பரில் வெளியாகிறது