பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு

இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6 மணி அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் ரவிசந்தர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குநர்களும், முன்னணி திரைப்பட விமர்சகர்களான தரன் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்று மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தை தயாரிக்கும் ஹெச் . ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது

Hey Sinamika Movie Review Click Here

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“ஜுராசிக் வேர்ல்ட்” படம் எப்படி இருக்கு
அடுத்த கட்டுரைபிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here