டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் ‘லேபில்’ நவம்பர் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘லேபில்’ நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் ‘லேபில்’ நவம்பர் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ்…

Read More

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச்…

Read More

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’

மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து ‘எம்புரான்’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற…

Read More

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம்…

Read More

“இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன் !!

“இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன். மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of Parliament) அவர்கள் வெளியிட்டார். “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன்…

Read More

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் தான் #NC23. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, நடிகை சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார். இயக்குனர் சந்து மொண்டேடியுடன் “யுவ சாம்ராட்” நாக சைதன்யாவின் பான்-இந்தியா திரைப்படமான #NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன்…

Read More

ஜவான் வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது

ஜவான் என்ற தடுக்க முடியாத சக்தி- இந்திய பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தைகளையும் புயலாக தாக்கியுள்ளது. இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது! ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. படத்தின் உலகளாவிய…

Read More

ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைசிறந்த படைப்பான ‘அனிமல்’ திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்து டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அத்துடன் ரன்பீர் கபூர் நடிக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரையும் படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.‌ இந்த போஸ்டரில் ரன்பீர் கபூரின் தோற்றம்.. போஸ்டராக மட்டுமில்லாமல் ரன்பீர் கபூரின் கதாபாத்திரத்தின் தன்மை விவரிப்பதை உறுதியளிக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் சிறப்பாக இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறது. ‘அனிமல்’…

Read More

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்!

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்! சென்னை: தனித்தியங்கும் இசைச்சமூகத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் திரைப்பட பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ள ‘அதிசயமே’ பாடல் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடல் வரிகளில் பெண்மையின் அம்சங்கள் உலக அதிசயங்களுக்கும், இயற்கையின் அழகுக்கும் இணையாக உள்ளதெனக் கூறுவது கருத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த இப்பாடல்…

Read More

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள். சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன் –…

Read More