*’விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா*
எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் 'விடுதலை'. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது.
விழா நாயகன் இளையராஜா பேசியதாவது, " இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்" என்றார்.
இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, "'விடுதலை' படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்" என்றார்.
மேலும் அவர் பேசியதாவது,...
போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ்
பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 இன்று...
“மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Shiju Thameen’s Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மார்ச்...
“பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில்
தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா...
‘பத்துதல’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பத்துதல' திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின்...
‘கொன்றால் பாவம்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய 'கொன்றால் பாவம்' திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1,...
In Car “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே...
லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – தயாரிப்பாளர் குமார்
லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை...
கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல் !
Lights On Media வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில்,...
“தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்...