சித்தா கதை
பழனியில் வசித்துவரும் கதையின் நாயகன் ஈஷ்வர், அரசு அதிகாரியாக இருக்கிறார். அவரின் அண்ணன் இறந்த பிறகு அவரின் குழந்தையையும், மனைவியையும் பத்திரமாக பார்த்து கொள்கிறார். நாயகனுக்கு திருமண பேச்சு எடுக்கும் சமயத்த்தில், தன் முன்னாள் காதலியை எதார்த்தமாக பார்க்கிறார். மீண்டும் காதல் வசப்படுகிறார். பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர்.
அந்த ஊரில் ஐய்யனார் கோவில் அருகே, தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. ஈஷ்வரன் தான், அண்ணன் மகள் சுந்தரியை பள்ளிக்கு கூட்டிச்சென்று வருவார். ஒருநாள் இவர்கள் குடும்பத்தில் நடந்துகொண்டிருந்த சண்டையில் குழந்தை காணாமல் போகிறது. அந்த குழந்தையை ஈஸ்வரன் தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் குழந்தை காணாமல் போனதற்கு பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த திரைப்படம் கண்டிப்பாக அணைத்து பெற்றோர்களும் பார்க்கவேண்டிய தமிழ் திரைப்படமாகும்.
இந்த கதையினை இயக்குனர் S.U அருண்குமார் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சித்தார்த் & குழந்தையின் எதார்த்த நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த மற்ற அனைவரின் நடிப்பு
➡பாடல் & பின்னணி இசை
➡திரைக்கதை
➡வசனங்கள்
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡குறை சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை
Rating: ( 4/5 )


























